2021 ஜூன் வரை அலுவலகத்துக்கு வருவதை ஊழியர்கள் விரும்பவில்லை- ஆப்பிள் தலைமைச் செயல் அலுவலர் டிம் குக்
பெரும்பாலான அலுவலர்கள் ஜூன் வரை அலுவலகத்துக்கு வருவதை விரும்பவில்லை என ஆப்பிள் தலைமைச் செயல் அலுவலர் டிம் குக் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயல் அலுவலர் டிம் குக், தனது ஊழியர்களுடன் காணொலியில் உரையாற்றினார்.
அப்போது நேருக்கு நேர் பணியாற்றுவதற்கு எந்த மாற்றும் இல்லை எனினும், பணிவரவு, முடிவுகள் ஆகியவற்றில் எந்த இழப்புமின்றி அலுவலகத்துக்கு வெளியில் இருந்தும் பணியாற்ற முடியும் என்பதை அறிய முடிந்ததாகவும் டிம் குக் குறிப்பிட்டார்.
Apple CEO Tim Cook tells employees that it “seems likely” that the majority of teams won’t be back in the office before June 2021 https://t.co/OlSAdIoig9
— Bloomberg (@business) December 11, 2020
Comments