ஆப்கான் நாட்டவரை மணந்து 3 மகள்களுடன் சிரமப்படும் இந்திய பெண்.. கணவரை மீட்டுத் தரும்படி தூதரகத்தில் கோரிக்கை

0 1618
ஆப்கான் நாட்டவரை மணந்து 3 மகள்களுடன் சிரமப்படும் இந்திய பெண்.. கணவரை மீட்டுத் தரும்படி இந்திய தூதரகத்தில் கோரிக்கை

ஆப்கான் நாட்டவரான தமது கணவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும் அவரை மீட்டுக் கொடுக்குமாறும் ஹைதராபாத்தை சேர்ந்த ரஃபியா சுல்தானா என்ற பெண் புகார் தெரிவித்துள்ளார்.

தாம் ஒரு இந்தியப் பெண் என்றும் ஹூசேன் அலி என்ற ஆப்கான் நாட்டவருடன் தமக்குத் திருமணம் நடந்ததாக அவர் தெரிவித்தார். குவைத்தில் பணிபுரிந்து வந்த தமது கணவர் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து செல்வார் என்றும் செலவுகளுக்குப் பணம் அனுப்பி வைப்பார் என்றும் ரஃபியா தெரிவித்தார்.

குவைத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய தமது கணவர் அங்கு குடியரிமை பெற்று தமது பெயரை மாற்றிக் கொண்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்த ரஃபியா மூன்று மகள்களுடன் சிரமப்படுவதாகவும் ஆஸ்திரேலியாவில் உள்ள தமது கணவரை கண்டுபிடித்துத் தருமாறும் இந்திய தூதரகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments