2000 - 2019ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பாம்பு கடித்து 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
கடந்த 2000 முதல் 2019ம் ஆண்டு வரை இந்தியாவில் பாம்பு கடித்து 12 லட்சம் பேர் பலியானதாக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடுகள் மற்றும் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய காணொலி மாநாட்டில் இந்தியாவில் பாம்பு கடித்தல் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவில் 300 வகையான பாம்புகள் உள்ளன என்றும் அவற்றில் குறைந்தது 60 இனங்கள் மிகவும் விஷம் கொண்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் விவசாயப் பகுதிகளில் வாழும் மக்களில் 70சதவீதம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments