ம.பி.,யில் விடுமுறை எடுப்பதற்கு விநோத காரணம் குறிப்பிட்ட போக்குவரத்துக் காவலர் அதிரடி பணியிட மாற்றம்

0 4838
மத்திய பிரதேச மாநிலத்தில் விடுமுறை எடுப்பதற்கு விநோத காரணம் குறிப்பிட்ட போக்குவரத்துக் காவலர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் விடுமுறை எடுப்பதற்கு விநோத காரணம் குறிப்பிட்ட போக்குவரத்துக் காவலர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போபாலில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வந்த திலிப் குமார் அஹிர்வார் என்பவர் தனது மனைவியின் சகோதரனுடைய திருமணத்தில் கலந்து கொள்வதற்காக டிசம்பர் 11-ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் விடுமுறை கேட்டு மேலதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.

அதில் இந்த திருமணத்தில் தாம் கலந்து கொள்ளாவிட்டால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மனைவி மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்நிலையில் அவருக்கு விடுமுறை அளிக்காத மாநில காவல்துறை தலைமை இயக்குநர் இர்சத் வாலி வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments