இஸ்ரேலில் வருகிற 27ந்தேதி முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி- பெஞ்சமின் நேதன்யாகு அறிவிப்பு
இஸ்ரேலில் வரும் 27 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.
பைசர் நிறுவனத்திடம் இஸ்ரேல் அரசாங்கம் ஆர்டர் செய்திருந்த கொரோனா தடுப்பூசிகளின் முதல் தொகுதி தற்போது டெல்அவிவ் வந்து சேர்ந்துள்ளது. இதனை பார்வையிட்ட பெஞ்சமின் நேதன்யாகு, நாள் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன் மூலம் மக்கள் மீண்டும் சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் நாட்டின் பொருளாதரம் மீண்டும் முன்னேற்றமடையும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Prime Minister Benjamin Netanyahu and Health Minister Yuli Edelstein, today, visited the Teva SLE Logistic Center, which is receiving the anti-coronavirus vaccines that have arrived in Israel, under special conditions.https://t.co/QpfK4EvK5T pic.twitter.com/fZQKyT7ct8
— PM of Israel (@IsraeliPM) December 10, 2020
Comments