கேரளா உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஒரு மணி நேரம் அனுமதி
2வது கட்டமாக நடைபெற்ற கேரளா உள்ளாட்சி தேர்தலில், மாலை 6.30 மணி நிலவரப்படி 76 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றதை தொடர்ந்து, 2வது கட்டமாக எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதிகபட்சமாக வயநாடு மாவட்டத்தில் 78.54 சதவீதம் பேர் வாக்களித்தனர். கொரோனா நோயாளிகள் தனியாக வாக்களிக்க ஒரு மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டது.
மாலை 6 மணிக்குப் பின் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்தபடி அவர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்குகளை பதிவு செய்தனர். வரும் 14 ஆம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவும். 16 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
Comments