பொதுப் போக்குவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கலாம்? ஆய்வு செய்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பொதுப் போக்குவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கலாம்? என ஆய்வு செய்து, முடிவு எடுக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகியிருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநகரப் போக்கு வரத்துக் கழகத்திற்கு நிதி பற்றாக்குறை என்றால் பொருளாதார நெருக்கடி நிலையை பிறப்பிக்கலாமா? என கேள்வி எழுப்பினர்.
வழக்கு விசாரணையை, பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments