சீனாவுக்கு எதிராக இந்தியாவை அமெரிக்கா தூண்டி விடுகிறது- ரஷ்யா குற்றச்சாட்டு
சீனாவுக்கு எதிராக இந்தியாவை தூண்டிவிடுவதாக அமெரிக்கா மீது ரஷியா குற்றம் சாட்டி உள்ளது.
ரஷிய சர்வதேச விவகார கவுன்சில் கூட்டத்தில் காணொலி மூலம் பேசிய அந்நாட்டு வெளியுவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஒரே மாதிரியான உலக ஒழுங்கை நிலைநாட்ட மேற்கு நாடுகள் முயற்சி செய்கின்றன என்றார்.
இந்தியா தற்போது மேற்கத்திய நாடுகளின் தொடர்ச்சியான, மோசமான கொள்கைகளின் ஒரு பொருளாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தோ- பசிபிக் நாடுகளைக் கொண்ட குவாட் அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம் அமெரிக்காவும், மற்றவர்களும் சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் இந்தியாவை ஈடுபடுத்த முயற்சிப்பதாக அவர் புகார் கூறினார்.
இதற்கு ரஷியா, சீனா அடிபணிய வாய்ப்பு இல்லை என்றும் இந்தோ-பசிபிக் யுக்தியை எதிர்ப்பதில் ரஷியா தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments