சென்னை வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையே விரைவில் மெட்ரோ ரயில்
சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் வருகிற ஜனவரி மாதம் மெட்ரோ ரெயில் ஓடும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகருக்கு 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 சுரங்க ரெயில் நிலையங்களும் 6 உயர்மட்ட ரெயில் நிலையங்களும் உள்ளன.
தற்போது மின்சார கேபிள்கள், தொலைத்தொடர்பு சிக்னல் கருவிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை இம்மாதம் இறுதியில் முடித்து ஜனவரி மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்ற பிறகு பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்குப் பின் ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments