ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாளை வேலைநிறுத்தப் போராட்டம்

0 2161
ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து IMA எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து IMA எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் போராட்டமும் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 20 ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், ஆயுர்வேத முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் 58 விதமான அறுவை சிகிச்சைகளை செய்ய தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது அரசிதழிலும் வெளியானது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அலோபதி மருத்துவர்களின் சங்கமான IMA, அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேத மருத்துவர்களுக்கான தகுதி என்ன? என கேள்வி எழுப்பி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments