மறைந்த பாடகர் எஸ்.பி.பி நினைவாக இசை வனம் அமைப்பு... நடிகர் விவேக் துவக்கி வைத்தார்
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக, கோவையில் இசை வனம் அமைக்கப்பட்டுள்ளது.
பச்சாபாளையம் பகுதியில் சிறுதுளி அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி சார்பில் 74 மரக் கன்றுகள் நடவு செய்யும் பணியை நடிகர் விவேக் துவக்கி வைத்தார். இதில் இசை கருவிகள் தயாரிக்க பயன்படுத்தும் மரங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக், ஓ.டி.டி தளங்கள் இருந்தாலும், மக்கள் திரையரங்கு சென்று படம் பார்க்கவே விரும்புவார்கள் என்று தெரிவித்தார்.
Comments