விவசாயிகளுடன், வெளிப்படைத் தன்மையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - வேளாண் துறை அமைச்சர்
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுடன், வெளிப்படைத் தன்மையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கொள்முதல் நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிபட கூறினார்.
உற்பத்தி விலையை விட ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச விலை இருக்க வேண்டும் என்று சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை மோடி அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். விவசாய நிலங்கள் தொழில் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படும் என்ற குற்றச்சாட்டையும் தோமர் திட்டவட்டமாக மறுத்தார்.
Comments