ரஜினிகாந்த் வீட்டுக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

0 2543
ரஜினிகாந்த் வீட்டுக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு, திரும்ப பெறப்பட்டு உள்ளது.

அரசியல் கட்சி துவக்கப் போவதாக ரஜினி அறிவித்த பிறகு, சென்னை - போயஸ்கார்டன் இல்லம் வரும் ரசிகர்களின் வருகை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

ரஜினியின் இல்லம் செல்லும் வழியில் இரு இடங்களில் தடுப்புகள் அமைத்து, ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருந்தனர். 

போயஸ்கார்டனில் வசிக்கும் பொதுமக்கள், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் பெரிதும் சிரமப்படுவதாக ரஜினியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு, காவல்துறை உயரதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாகவும், இதன்படி, போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளதாகவும்  காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments