நெல்லை : பாபநாசநாதரிடத்திலேயே கைவரிசை... கம்பி எண்ணும் கயவர்கள்!

0 9236

பாவங்களை தீர்க்கும் பாபநாசநாதர் கோயிலில் தங்க நகைகளை திருடிய கோயில் ஊழியர்கள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாபநாசம், பாபநாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். தாமிரபரணியில் குளித்து பாபநாசநாதரை தரிசனம் செய்தால் செய்த பாவங்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சித்திரை விசு திருவிழா காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலில் கூடுவார்கள். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம் வெள்ளி என கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வாடிக்கை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு , கோயில் நிர்வாகம் கோயிலில் இருந்த தங்க நகைகளை தணிக்கை செய்து பார்த்தது. அப்போது 199 கிராம் நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் நிர்வாக அதிகாரி விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . போலீஸ் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். விசாரணையில் கோயிலில் பணி புரியும் ஊழியர்களான விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த சுடலைமுத்து மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது .

சுடலைமுத்து, மற்றும் மணிகண்டனிடத்தில் தீவிர விசாரணை நடத்திய போலீஸார் அவர்களிடத்திலிருந்து நகைகளை கைப்பற்றினர். பாபாநாசநாதரிடத்திலேயே கைவரிசை காட்டிய இருவரும் தற்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments