’வேளாண் சட்டங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமே ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி’ - பிரகாஷ் ஜவடேகர்

0 3329
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த வெற்றி, புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் ஆதரிப்பதைக் காட்டுவதாக பாஜக தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த வெற்றி, புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் ஆதரிப்பதைக் காட்டுவதாக பாஜக தெரிவித்துள்ளது.

டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சியைவிட அதிக இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாக இதைக் கருதுவதாகத் தெரிவித்தார்.

தெலங்கானா, பீகார், அருணாசலப் பிரதேசம் ஆகியவற்றிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். வாக்காளர்கள் பாஜகவை ஆதரிப்பதையும், எதிர்மறைக் கொள்கைகள் கொண்ட எதிர்க்கட்சிகளைப் புறக்கணிப்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகப் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments