பணம் செலுத்த கூறிய சுங்கச்சாவடி ஊழியரின் கன்னத்தில் பளார் விட்ட பெண்..!
ஆந்திராவில் சுங்கச்சாவடி ஊழியரை பெண் ஒருவர் கன்னத்தில் அறையும் காட்சி வெளியாகியுள்ளது.
விஜயவாடா அருகே உள்ள காஜா சுங்கச்சாவடியை ஆந்திர மாநில கட்டிட தொழிலாளர்கள் நலவாரிய தலைவரான ரேவதி தனது காரில் கடக்க முயன்றுள்ளார். அப்போது பணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியதால் ரேவதி தடுப்பு கேட்டை தள்ளிவிட்டு ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் கோபமடைந்த ரேவதி ஊழியரை கன்னத்தில் அறைந்த நிலையில் அங்கு வந்த அவரது ஓட்டுநர் சமாதானம் செய்துஅழைத்துச் சென்றார்.
#WATCH| YSRCP leader D Revathi slaps a toll plaza staff at Kaja Toll in Guntur district after she was stopped when she allegedly refused to pay toll tax #AndhraPradesh pic.twitter.com/NaHAzO6VDm
— ANI (@ANI) December 10, 2020
Comments