ஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
ஆந்திர மாநிலம் மேற்குக் கோதாவரி மாவட்டம் ஏலூரில் மர்ம நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
ஏலூரில் வாந்தி மயக்கம், கால் கை வலிப்பு உள்ளிட்ட அறிகுறிகளுடன் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஏலூர், விஜயவாடா, குண்டூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குப் பின் 510 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
விஜயவாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோரில் சுப்பரவம்மா, சந்திரராவ் நேற்றிரவு உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
47 பேர் விஜயவாடாவிலும், 31 பேர் குண்டூரிலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏலூரில் குடிநீரில் ஈயம், நிக்கல் ஆகிய நச்சு உலோகங்கள் அதிக அளவில் கலந்திருந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
Comments