தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு

0 2728

தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 7 அரசு கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். ஆசிரியர் படிப்புக்கு 2,040 இடங்களில் சேர்வதற்கு இணையத்தளத்தில் விண்ணப்பப்பதிவு கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இதுவரை இரண்டாயிரத்து எண்ணூற்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதோர் இன்று மாலைக்குள் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு இணையவழியிலேயே நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments