தனி காலிஸ்தான் அமைக்கும் திட்டத்துடன் இந்திய ராணுவத்தில் உள்ள சீக்கிய வீரர்கள் தூண்டப்படுவதாக என்ஐஏ திடுக்கிடும் தகவல்
தனி காலிஸ்தான் அமைக்கும் திட்டத்துடன் இந்திய ராணுவத்தில் உள்ள சீக்கிய வீரர்கள் தூண்டப்படுவதாக என்ஐஏ திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் SFJ எனப்படும் நீதிக்கான சீக்கியர் அமைப்பு இதற்கான சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.
டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பிரிவினைவாத இயக்கமான SJF தீவிரவாதிகள் 16 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
காலிஸ்தான் தீவிரவாதிகளின் முன்னணி இயக்கமான இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. சமூகவலைதளங்களிலும் தனி காலிஸ்தான் பிரச்சாரங்களை அதன் உறுப்பினர்கள் நடத்தி வருகின்றனர்.
Comments