உதவி செய்ய சொத்துகள் அடமானம்... ஆசியாவின் மிகச்சிறந்த செலிபிரட்டியாக சோனு சூட் தேர்வு!

0 7930

கொரோனா காலத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு பிரபலமானவர் வில்லன் நடிகர் சோனு சூட். நடிகர் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் தமிழ் படத்தில்தான் முதன் முதலில் சோனு சூட் அறிமுகமானார். அதனால்தான் என்னவோ விஜaகாந்த் போலவே நடிகர் சோனு சூட்டிடம் இரக்க குணம் மறைந்திருந்து, இந்த கொரேனா காலத்தில் அது வெளிப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடரின் போது, மக்களுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்து பல்வேறு உதவிகளை சோனு சூட் மேற்கொண்டு வந்தார். இடம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப உதவியது, செல்போன் டவர் கிடைக்காத மலைக்கிராம மாணவர்களுக்கு டவர் அமைத்துக் கொடுதத்து, அறுவை சிகிச்சை செய்ய கோரிக்கை வைப்பவர்களுக்கு சொந்த செலவில் மருத்துவ உதவிகளை செய்வது என சோனு சூட்டின் உதவிகள் தொடர்ந்து வருகின்றன.

மக்களுக்கு உதவுவதற்காக சோனு சூட் தன் பெயரிலும், தனது மனைவி சோனாலி பெயரிலும் உள்ள இரண்டு கடைகள் மற்றும் 6 பிளாட்டுகள் உள்ளிட்ட 8 சொத்துக்களை ரூ. 10 கோடிக்கு ஸ்டான்டர்ட் சார்ட்ர்ட் வங்கியில் அடமானம் வைத்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகி நவம்பர் 24 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளதாக மணி கன்ட்ரோல் என்கிற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, ஆசியாவின் மிகச்சிறந்த சினிமா ஆளுமைகள் பட்டியலில் சோனு சூட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்கிற வாரப்பத்திரிகை 50 ஆசிய சினிமா நட்சத்திரங்கள் பட்டியலில் சோனு சூட்டுக்கு முதலிடத்தை அளித்துள்ளது. கொரோனா காலத்தில் சோனு சூட் மேற்கொண்ட சமூகப்பணிகளே அவரை முதலிடத்துக்கு உயர்த்தியதாக சொல்லப்படுகிறது.அமிதாப்பச்சன், பிரியங்கா சோப்ரா ஆகியோரெல்லாம் சோனு சூட்டுக்கு பிறகே இடம் பிடித்துள்ளார். தமிழ் நடிகர்கள் யாருக்கும் இடம் இல்லை. தெலுங்கு நடிகர் பிரபாஸ் 7- வது இடத்தை பிடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments