ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை இனி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் - பல்கலைக்கழக மானியக்குழுச் செயலர்

0 2808

ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான உதவித்தொகை இனி மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழுச் செயலர் ரஜனிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலாண்டு அடிப்படையில் வழங்கப்பட்ட ஆராய்ச்சி உதவித்தொகை இனி மாதந்தோறும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

புதிய வழிமுறைகளின்படி அக்டோபர் மாதம் வரைக்கான உதவித்தொகை மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து தாமதத்தைத் தவிர்க்க இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments