ஜனநாயகம் அதிகமாக இருப்பது சீர்திருத்தங்களுக்கு தடையா? நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் பேச்சால் சர்ச்சை
இந்தியாவில் அளவுக்கு அதிகமான ஜனநாயகம் இருப்பதால், கடினமான சீர்திருத்தங்களை கொண்டுவருவது மிகவும் சிரமம் என கூறி நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
தன்னிறைவுக்கான பாதை என்ற பொருளில் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசினார். அப்போது இவ்வாறு கூறிய அவர், அதே நேரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடினமான சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் மோடி தலைமையிலான அரசு தைரியத்துடனும் உறுதியுடனும் இருப்பதாகவும் பாராட்டினார்.
வேளாண்மைத் துறையில் பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வருவது அத்தியாவசியம் என்ற அவர், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் தேவையானது தான் என கூறினார்.
Comments