ஸ்பேஸ்எக்சின் ஸ்டார்ஷிப் புரோட்டோடைப் பூமிக்கு திரும்பி வந்த போது வெடித்துச் சிதறியது
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் புரோட்டோடைப் பூமிக்கு திரும்பி வந்த போது வெடித்துச் சிதறியுள்ளது.
டெக்சாசுக்கு அருகே உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் இருந்து நேற்று தீப்பிழப்புகளை கக்கியவாறு வானில் பாய்ந்த இந்த விண்கலம் 8 கிலோ மீட்டர் உயரம் வரை சென்றது. ஆனால் திரும்பி வரும் போது, எரிகலன் தொழில்நுட்ப கோளாறால் பூமியில் விழுந்து வெடித்து தீப்பிடித்து எரிந்தத
3 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த புரோட்டோடைப்பின் சோதனை ஓட்டத்தின் போது ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து எஞ்சின்களும் செயலிழந்தன.
16 மாடி அளவுக்கு உயரமுள்ள இந்த புரோட்டோடைப் விண்கலத்தை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்த பின்னர், ஸ்டார்ஷிப் மூலமாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது என்பது ஸ்பேஸ்எக்ஸ் அதிபர் எலான் மஸ்கின் கனவுத் திட்டம். ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
SpaceX's unmanned Starship prototype rocket exploded on its return landing following a test flight https://t.co/mEJ9vKOX2u pic.twitter.com/bZSnteIJp2
— Reuters (@Reuters) December 10, 2020
Comments