நாளொன்றுக்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசி போட தயார்.. மத்திய அரசின் பதிலுக்கு காத்திருப்பதாக அப்பலோ மருத்துவமனை தகவல்
தினமும் பத்து லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட தாங்கள் தயார் என்று இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை குழுமமான அப்பல்லோ தெரிவித்துள்ளது.
சென்னையில் இதை தெரிவித்த அப்போல்லோவின் நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி, அதற்கு தேவையான பணியாளர்களும், ஆயிரக்கணக்கான மருந்தகங்களும், 71 மருத்துவமனைகளும் தயாராக உள்ளதாக கூறினார்.
அதே சமயம் கொரோனா தடுப்பூசி போடுவது முழுக்க முழுக்க அரசின் நடவடிக்கையாக இருக்குமா அல்லது அதில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு இருக்குமா என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் தடுப்பூசி விநியோகம் குறித்து அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், தனியாருக்கும் அதில் இடமிருக்குமா என தெரியவில்லை.
நாளொன்றுக்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசி போட தயார்.. மத்திய அரசின் பதிலுக்கு காத்திருப்பதாக அப்பலோ மருத்துவமனை தகவல் #CoronaVaccine | #Covid19 | #ApolloHospital | #CentralGovt https://t.co/nfCBvKjRPv
— Polimer News (@polimernews) December 10, 2020
Comments