தந்தை இல்லாத நிலையில் ஒரே இரவில் தாயையும் சகோதரியையும் பறிகொடுத்த சிறுமி! மதுரவயல் சம்பவத்தில் பெரும் சோகம்

0 8616

சென்னை அம்பத்தூரையடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்தவர் கரோலின் பிரிசில்லா . இவரின் கணவர் எட்வின் 2014 - ஆம் ஆண்டு இறந்து விட்டார். கல்லூரி பேராசிரியையான இவருக்கு இவாலின் என்ற மகளும் 16 வயதில் இளையமகள் ஒருவரும் உள்ளனர்.

மகள்களை தன்னம்பிக்கையுடன் வளர்ந்து வந்த பிரிசில்லா, அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கி வந்தார். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஷாப்பிங் சென்று விட்டு கரோலின் தன் மூத்த மகள் இவாலினுடன் கடந்த 6 - ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீரில் தாயும் மகளும் விழுந்து கால்வாயில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சாலையில் இரு சக்கர வாகனம் மட்டும் அனாதையைக கிடப்பதை கண்ட மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறையினர் வந்து இருவரின் சடலங்களையும் மீட்ட‘னர்.

நொளம்பூர் போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

வடிகால் வாய்க்காலில் விழுந்து பலியான கரோலின் பிரிசில்லா மற்றும் இவாலின் ஆகியோரின் உடல் சொந்த ஊரான கடலூரில் அடக்கம் செய்யப்பட்டது. ஏற்கெனவே, தந்தையை இழந்து விட்ட நிலையில், ஒரே இரவில் தாயையும் சகோதரியையும் பரிகொடுத்த பிரிசில்லாவின் இளையமகள் இப்போது அனாதராவாக உள்ளார்.

தாயையும், சகோதரியையும் இழந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத சிறுமிக்கு அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர். தற்போது, சிறுமிக்கு உறவு என்று அவரின் 87 வயது தாத்தா பர்னேஸ் மட்டுமே உள்ளார். மற்றபடி, சிறுமிக்கு நெருங்கிய உறவுகள் என்று சொல்லகூடிய அளவுக்கு யாரும் இல்லை என்றே சொல்லப்படுகிறது. இதற்கிடையே, மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான பெஞ்சமின், சிறுமியின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments