செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

0 2209

சென்னை, மும்பை உள்ளிட்ட செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 60 இடங்களில், வருமான வரித்துறையினரின் சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. 

வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து, நேற்று காலை 8 மணி முதல் அந்நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது வரை கணக்கில் காட்டப்படாத 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது.

தொடரும் சோதனையில் பல்வேறு ஆவணங்கள், கணினி தரவுகள் போன்றவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து, செட்டி நாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments