800 ஆண்டுகளுக்குப் பின்னர் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்ற வாய்ப்பு
800 ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பாண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரிய வாய்ப்பிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் 21 ஆம் தேதி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய இரண்டு கிரகங்களான வியாழன் மற்றும் சனி ஆகியவை அருகருகே தோன்றும். அவையிரண்டும் ஒளிரும்போது ஏற்படும் வெளிச்சமே கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது.
இந்த இரு கிரகங்களும் கடந்த ஆயிரத்து 226ம் ஆண்டு நெருக்கமாக இருந்தாகக் குறிப்பிடும் ஹூஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தற்போது 800 ஆண்டுகளுக்குப் பின் அந்த நிகழ்வைக் காண வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments