காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி கைது

0 1302

காஷ்மீரில் நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டிய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புத்காம் மாவட்டத்தில் அம்மாநில காவல்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான நபரைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த தாரிக் அகமது பட் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments