971 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

0 2451
டெல்லியில், 971 கோடி ரூபாய் செலவில் பல்வேறு அம்சங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ள, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

டெல்லியில், 971 கோடி ரூபாய் செலவில் பல்வேறு அம்சங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ள, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

சென்ட்ரல் விஸ்தா திட்டத்தின் கீழ் டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகில், புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்பாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான, பூமிபூஜை இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 1 மணி அளவில் நடைபெறும் விழாவில், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். 

நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கில் அமையவுள்ள இந்தக் கட்டிடம், நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடிய வலிமையுடன் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் எழுப்பப்படவுள்ளது. தரைத்தளம், தரைக்குக் கீழே ஒரு தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் நான்கு தளங்களுடன் கட்டப்படவுள்ளது.

காகிதப் பயன்பாட்டுக்கு அவசியமில்லாத வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பெரும் மண்டபம் அமைக்கப்படவுள்ளது. நூலகம், நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான ஓய்வறைகள், நிலைக் குழுக்களுக்கான அலுவலகங்கள், உணவகம், வாகன நிறுத்தம் உள்ளிட்டவை புதிய கட்டடத்தில் அமைக்கப்படவுள்ளன.

முன்னதாக, இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை, மரங்களை வெட்டுவதற்கும், பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தகக்து.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments