உய்குர் இன முஸ்லீம்களை நவீன நுட்ப முறையில் சீன கம்யூனிச அரசு சிறைபடுத்துவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவல்
சீன கம்யூனிச அரசு, உய்குர் இன முஸ்லீம்களை, சிறைவைப்பதிலும், அவர்கள் மீது பயங்கரவாத முத்திரையை குத்தவும், மிகப்பெரிய அளவில், நவீன திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் (Xinjiang), சில ஆண்டுகளாக, ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, அங்குவாழும் முஸ்லீம்களை, தடுப்பு முகாம்களில் அடைத்திருப்பதோடு, பிரிவினைவாதிகள் என அடையாளப்படுத்தி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இவர்கள் குறித்த டேட்டாக்களை உருவாக்கி வைத்திருக்கும் சீனா, அதில், சுமார் 2 ஆயிரம் பேரை, தானியங்கி நுட்ப முறையில், ரேண்டமாக தேர்ந்தெடுத்து சிறைப்படுத்தியிருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Comments