இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகல்

0 3920

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகி உள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் பீல்டிங்கின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. தசை பிடிப்பால் அவதிப்பட்ட அவர் உடனடியாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இதனால் 3-வது போட்டியில் ஆடவில்லை. இதேபோல 20 ஓவர் தொடரிலும் அவர் காயத்தால் விலகியிருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக வருகிற 17-ந் தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்டில் வார்னர் ஆடவில்லை. இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments