நாடு முழுதும் பொது இடங்களில் வைபை சேவை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
பொது இடங்களில் PM WANI என்ற பெயரில் வைபை சேவை வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பொது இடங்களில் PM WANI என்ற பெயரில் மிகப்பெரிய வைபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார். இதற்காக நாடு முழுவதும் பொது டேட்டா சென்டர்கள் திறக்கப்படும் என்றும், இதற்கான உரிமம், கட்டணம் அல்லது பதிவு எதுவும் இருக்காது என்றும் அவர் கூறினார்.
ஒரு கோடி டேட்டா சென்டர்களை திறக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்ற அவர், கொச்சி - லட்சத்தீவுகள் இடையே ஆப்டிக்கல் பைபர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆத்மநிர்பர் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்திற்காக நடப்பாண்டுக்காக 1584 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும், 2020 முதல் 2023 வரையிலான, முழு திட்ட காலத்திற்கு 22,810 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் சுமார் 58.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments