கூவம் கரையோர குடிசை வீடுகள் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றம் : கூவத்திற்குள் இறங்கி மக்கள் சிலர் போராட்டம்

0 5910

சென்னை தீவுத்திடல் கூவம் நதிக்கரையோரம் கட்டியிருந்த குடிசை வீடுகள், இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இங்கு வசித்த 2 ஆயிரத்து 92 குடும்பங்களுக்கும் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் ஆயிரத்து 745 பேர், பெரும்பாக்கத்தில் குடியேறி விட, எஞ்சிய 347 குடும்பங்களில் பெரும்பாலானோர் பெரும்பாக்கம் புறப்பட்டு செல்ல, வெளியேற மறுத்த 10 அல்லது 15 குடும்பங்களை சேர்ந்தவர்களில் 3 பெண்கள் உள்பட சிலர் மட்டும், கூவத்திற்குள் இறங்கி, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments