ஈராக்கில் 2 எண்ணெய் கிணறுகளில் குண்டுகள் வீசி தாக்குதல்

0 2304

ஈராக்கில் 2 எண்ணெய் கிணறுகள் குண்டுவீச்சால் தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டின் கிர்குக் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கப்பாஸ் எண்ணெய் வயலில் (Khabbaz oilfield) இருக்கும் 2 கிணறுகளில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் வயலில் இருந்து நாள்தோறும் 25,000 பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தெரியாததால் அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments