விண்வெளி வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளுடன் ஸ்பேஸ்எக்சின் 100 ஆவது பால்கன் ராக்கெட், மேம்படுத்தப்பட்ட டிராகன் கேப்ஸ்யூல் குறுங்கலம் வாயிலாக விண்ணில் பாய்ந்தது

0 1444

னது 100 ஆவது பால்கன் 9 ராக்கெட்டை ஏவியுள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட டிராகன் கேப்ஸ்யூல் என்ற குறுங்கலம் வாயிலாக ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ள விண்வெளி வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை அனுப்பி வைத்துள்ளது.

நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து டிராகன் குறுங்கலம் செலுத்தப்பட்டது.


இந்த குறுங்கலத்தில் சுமார் 2900 கிலோ எடைக்கு பரிசுப் பொருட்களும், உணவு வகைகளும் உள்ளன. ஏற்கனவே கடந்த மாதம் மற்றோர் டிராகன் குறுங்கலம் வாயிலாக 4 பேர் ஐஎஸ்எஸ்ஐக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒருமாதம் கழித்து இந்த குறுங்கலம் பூமிக்கு திரும்பும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments