மீதமாகும் உணவுப் பொருள், பசியால் வாடுவோருக்கு விநியோகிக்கும் புதிய திட்டம் : சென்னை மாவட்ட ஆட்சியர் துவக்கிவைப்பு

0 2002

மீதமாகும் உணவுப்பொருட்களை, பசியால் வாடும் ஏழை - எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் புதிய திட்டம் சென்னையில் துவக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி துவக்கி வைத்த புதிய திட்டத்தின் படி,திருமணம், பிறந்தநாள், மஞ்சள் நீராட்டு விழா  உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில்  மீதமாகும் உணவு பொருட்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் சேகரித்து, உணவு தேவைப்படுவோருக்கு உடனடியாக வழங்கப்படும்.

இதற்காக,  சென்னை மாநகரம் முழுவதும் 100 இடங்கள் உணவு தேவைப்படுவோர் வசிக்கும் பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, மீதமாகும் உணவை, பசியால் வடுபவர்களுக்கு உதவ விரும்புவோர்  90877 90877 மற்றும் 9944552929 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments