அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி, எம்ஜிஆரை இரவல் வாங்க கூடாது : எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்த அதிமுகவை தவிர யாருக்கும் உரிமை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி, எம்ஜிஆரை இரவல் வாங்க கூடாது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்த அதிமுகவை தவிர யாருக்கும் உரிமை இல்லை என்றார்.
வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதிக்க ஆ. ராசா தயாரா? என கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், தயார் என்றால் வரும் திங்கட்கிழமை தன் சொந்த செலவில் அதற்கான ஏற்பாட்டை செய்வதாக கூறினார்.
முன்னதாக, நாகப்பட்டினத்தில் உள்ள ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மீனவர்களின் வாரிசுகளுக்கு சேர்க்கை உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
Comments