அரசு நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பில்லர் குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாப பலி

0 2522
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பில்லர் குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பில்லர் குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஹரிஷ் என்ற சிறுவன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது மழை நீர் தேங்கி நின்ற அந்த குழியில் கால் தடுமாறி விழுந்து விட்டான். மற்ற சிறுவர்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த அவனது பெற்றோர் மற்றும் போலீசார் குழிக்குள் தேடியபோது சிறுவன் சடலம் மீட்கப்பட்டது. இதனை பார்த்து சிறுவன் பெற்றோர்கள் கதறி அழுதனர்.

அரசு கட்டடத்திற்காக தோண்டப்பட்ட குழி முழுவதும் நீர் நிறைந்த நிலையில் ஒப்பந்ததாரர் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் சிறுவன் உயிரிழக்க நேரிட்டதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments