விண்வெளிக்கு செல்வதற்கான செலவை ஆயிரத்தில் ஒரு பங்காக குறைக்க உதவக்கூடிய ராக்கெட்டின் புரோட்டோடைப் ஏவுதலை கடைசி நிமிடத்தில் நிறுத்தியது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்

0 2267

விண்வெளிக்கு செல்வதற்கான செலவை ஆயிரத்தில் ஒரு பங்காக குறைக்க உதவக்கூடிய மீண்டும் மீண்டும் பயன்படுத்த தக்க ராக்கெட்டின் புரோட்டோடைப் ஏவுதலை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கடைசி நிமிடத்தில் நிறுத்தியது.

ஸ்டார்ஷிப் ராக்கெட் எனப்படும் இந்த திட்டத்தில், 16 மாடி உயரமுள்ள ராக்கெட்டின் புரோட்டோடைப்பை, டெக்சாசிற்கு மேலே 12.5 கிலோ மீட்டர் உயரத்திற்கு செலுத்தி பரிசோதிப்பதே ஸ்பேஸ்எக்சின் நோக்கம்.

செவ்வாய் அன்று புரோட்டோடைப் ராக்கெட்டை ஏவுவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து அது தீப்பிழம்புகளை கக்கிக் கொண்டு பறக்க துவங்க ஆயத்தமான நேரத்தில் 1.3 விநாடிகளுக்கு முன்பாக சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த ராக்கெட் சோதனையில் மேலும் பல அம்சங்களை சரி செய்ய வேண்டி உள்ளதால் திட்டமிட்டபடி அது ஏவப்படவில்லை என ஸ்பேஸ் எக்ஸ் அதிபர் மஸ்க் எலான் தெரிவித்துள்ளார். ராக்கெட் இன்றோ, நாளையோ ஏவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments