வேற்றுகிரகவாசிகள் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் : இஸ்ரேல் விண்வெளி பாதுகாப்பு துறை முன்னாள் தலைவர் இசெத் தகவல்

0 11752
வேற்றுகிரகவாசிகள் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் : இஸ்ரேல் விண்வெளி பாதுகாப்பு துறை முன்னாள் தலைவர் இசெத் தகவல்

வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மைதான் எனவும், அமெரிக்காவும், வேற்றுகிரகவாசிகளும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் விண்வெளி பாதுகாப்பு துறை முன்னாள் தலைவர் ஹாயிம் இசெத் (Haim Eshed) தெரிவித்துள்ளார்.

வேற்றுகிரகவாசிகள் உண்மையில் உள்ளனரா, இல்லையா என விவாதம் நடத்தப்பட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஹாயிம் இசெத் அளித்துள்ள பேட்டியில், வேற்றுகிரகவாசிகள் இருப்பது டிரம்புக்கும் தெரியும் என கூறியுள்ளார்.

தங்களை எதிர்கொள்ள பூமிவாசிகள் இன்னும் தயாராகாததால் தாங்கள் இருப்பதை ரகசியமாக வைத்திருக்கும்படி அமெரிக்காவிடம் வேற்றுகிரகவாசிகள் வலியுறுத்தியுள்ளதாகவும்,அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக வேற்று கிரகவாசிகளுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்பில் உள்ளதாகவும் ஹாயிம் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments