தனது 4 மாத ஆண் குழந்தை உட்பட குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி - நடிகை மேக்னா ராஜ்

0 28356

தனது 4 மாத ஆண் குழந்தை உட்பட குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக  நடிகை மேக்னா ராஜ் தெரிவித்துள்ளார். 

நடிகை மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கும்,  தனது 4 மாத குழந்தை மற்றும் தாய், தந்தை என குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், குடும்பமாக இந்த கொரோனா போரில் வென்று திரும்பி வருவோம் என்றும் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் மேக்னாவின் கணவர் காலமானது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments