டாட்டா குழுமத்தில் சபூர்ஜி பலோன்ஜி குடும்பத்தின் பங்குகளின் மதிப்பு ரூ.80,000 கோடி என மதிப்பீடு

0 4809
டாட்டா குழுமத்தில் சபூர்ஜி பலோன்ஜி குடும்பத்தின் பங்குகளின் மதிப்பு ரூ.80,000 கோடி என மதிப்பீடு

டாட்டா குழுமத்தில் சபூர்ஜி பலோன்ஜி குடும்பத்தின் 18 விழுக்காடு பங்குகளின் மதிப்பு எண்பதாயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா சூழலில் நிதி நெருக்கடியால் டாட்டா குழுமத்தில் தங்களுக்கு உள்ள பங்குகளை அடமானம் வைத்து நிதி திரட்ட சபூர்ஜி பலோன்ஜி குடும்பம் திட்டமிட்டது.

அதற்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய டாட்டா குழுமம், பங்குகளை விலைக்கு வாங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தது.

இதையடுத்து டாட்டா குழுமத்தில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்ட சபூர்ஜி பலோன்ஜி குடும்பம் தங்கள் பங்குகளின் மதிப்பு ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரிவித்தது.

இந்நிலையில் சபூர்ஜி பலோன்ஜி பங்குகளின் மதிப்பு 80 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே இருக்கும் என டாட்டா குழுமம் மதிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments