இந்திய வரலாற்றில் முதன்முறையாக, தேசிய சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை ஆணையம் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு

0 2103

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, தேசிய சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைக்க உள்ளது. 

சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆணையம் உதவிகரமாக இருக்கும். போக்குவரத்து துறை நிபுணர்கள் மற்றும் சாலை பாதுகாப்பு நிபுணர்கள் இந்த ஆணையத்தில் இடம் பெறுவார்கள்.

சாலை மற்றும் வாகன போக்குவரத்து பாதுகாப்பு, வாகனப்பதிவு முறைகள் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசுக்கு அவர்கள் ஆலோசனை கூறுவார்கள் என கூறப்படுகிறது.

உலகின் மொத்த சாலை விபத்துக்களில் 11 சதவிகிதம் இந்தியாவில் நடக்கிறது. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.14 சதவிகித இழப்பு ஏற்படுவதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments