நில நடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரித்ததா?

0 2033

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் அதன் முந்தைய உயரத்தை விட 86 சென்டிமீட்டர் அதிகரித்துள்ளதாக சீனாவும், நேபாளமும் அறிவித்துள்ளன.

நேபாளமும், சீனாவும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தன. இதனால், அதன் உண்மையான உயரத்தில் குழப்பம் நிலவி வந்தது. எவெரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ள போதும், அதன் உயரத்தை நேபாள அரசு இதுவரை கணக்கிட்டதில்லை. அந்நாடு 1954 ம் ஆண்டு இந்திய ஆய்வு மையம் அளித்த தகவலின் அடிப்படையில் எவெரெஸ்டின் உயரத்தை 29,028 அடி எனக் குறிப்பிட்டு வந்தது. அதே சமயம் சீன அரசோ, இந்தியா குறிப்பிட்டதை விட 11 அடிகள் குறைவாக 29,017 எனக் குறிப்பிட்டு வந்தது.

இந்த நிலையில், நேபாளமும் சீனாவும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவிட நிபுணர்களை அனுப்பி வைத்திருந்தன. இந்த நிபுணர்கள் தங்கள் ஆய்வினை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து சீனா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இரு நாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை 29,031.69 அடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது, முன்பு கணக்கிடப்பட்ட உயரத்தை விட 86 சென்டி மீட்டர் அதிகமாகும்.

கடந்த 2015 ம் ஆண்டில் நேபாளத்தில் 7.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்நாட்டைச் சேர்ந்த 9000 மக்கள் பலியாகினர். இந்த நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments