கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை பார்வையிட 64 வெளிநாட்டு தூதர்கள் ஐதராபாத் வருகை

0 2693

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை பார்வையிடுவதற்காக 64 நாடுகளின் தூதர்கள் ஐதராபாத் வந்து சேர்ந்தனர்.

டெல்லியில் இருக்கும் பல்வேறு நாட்டுத் தூதர்களான இவர்கள் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக், பயாலஜிகல்-இ ஆகிய மருந்து நிறுவனங்களுக்குச் சென்று கொரோனா தடுப்பூசி உற்பத்தி நடவடிக்கைகளை நேரில் பார்க்கின்றனர்.

இந்த இரண்டு நிறுவனங்களும் கொரோனா தடுப்பூசி தயாரித்து வருவது குறித்த விவரம் கடந்த மாதம் 6 ஆம் தேதி வெளியுறவு அமைச்சகத்தால், வெளிநாட்டு தூதர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

கோவாக்சின் என்ற இந்த தடுப்பூசியை வெளிநாடுகளுக்கும் விற்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக வெளிநாட்டு தூதர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments