ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் மறைத்து வைத்த கண்ணி வெடிகள் கண்டுபிடிப்பு
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் புதைத்து வைத்திருந்த 9 கண்ணி வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேதினி நகரில் இருந்து தலைநகர் ராஞ்சி செல்லும் சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் அடங்கிய கூட்டுப் படையினர் திங்கள்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாலையோரத்தில் சில வயர்கள் இருப்பதைக் கண்ட அவர்கள் அதனைச் சோதனை செய்தபோது, ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கண்ணி வெடிகளைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து அதனை பத்திரமாக தோண்டியெடுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணி வெடிகளை, செயலிழக்கச் செய்ய அனுப்பி வைத்தனர்.
Comments