கர்நாடக சட்டசபையில் விளைநிலங்களை வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்
விளை நிலங்களை வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கி நிலச்சட்டங்களில் கர்நாடக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதற்கான மசோதா நேற்று விதான் சவுதாவில் நடைபெற்ற சட்டமன்றக் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேறியது. அரசுக்கு ஆதரவாக 37 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் பதிவாகின.
மதசார்பற்ற ஜனதா தளத்தின் பத்து உறுப்பினர்கள் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தனர். 28 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இக்கூட்டத்தை நிராகரித்தனர்.
மசோதாவின் நகல்களைக் கிழித்து எறிந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொழில்துறையினர் வேளாண் நிலங்களை வாங்குவதற்கு இருந்த கட்டுப்பாடுகள் இந்த சட்டத்திருத்தத்தால் நீக்கப்பட்டுள்ளன.
Comments