இத்தாலியில் ஏற்பட்ட திடீர் சூறாவளி காற்று, கனமழையால் கடல் நீர் மட்டம் உயர்வு : தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்
இத்தாலி நாட்டில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்ததால் வெனிஸ் நகரம் தண்ணீரில் தத்தளித்தபடி உள்ளது.
அந்நகரத்தில் கடல் நீர் புகாமல் இருப்பதற்காக வெள்ளத்தடுப்பு சாதனங்கள் உள்ளன. ஆனால் திடீரென கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் கடலில் அலைகள் 3அடி உயரத்திற்கு எழுந்த தால் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.
இதன் காரணமாக வெனிஸ் நகரமே தண்ணீர் நகரமாக மாறி உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தண்ணீர் புகா உடை அணிந்தபடி வெளியில் நடமாடி வருகின்றனர்.
குறைந்த து 48 மணி நேரத்திற்கு முன்பு முன் அறிவிப்பு கொடுத்தால் மட்டுமே வெள்ளத் தடுப்பு சாதனங்களை பயன்படுத்த முடியும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Comments