கொரோனா பாதிப்பால் ரபேல் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எந்தவிதத் தாமதமும் ஏற்படாது - பிரான்ஸ் நாட்டு தூதர்
கொரோனா பாதிப்பால் ரபேல் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எந்தவிதத் தாமதமும் ஏற்படாது என்று பிரான்ஸ் நாட்டு தூதர் Emmanuel Lenain உறுதியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறித்த நேரத்தில் இந்தியாவுக்கு விமானங்களை வழங்க ஊழியர்கள் இரவுபகலாக பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிய அவர், இருநாட்டு தொழில்துறை, வர்த்தகம் புதுப்பிக்கப்பட்ட மின் ஆற்றல் உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாகக் கூறினார்.
தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் மாணவர்கள் பிரான்சுக்குப் படிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் தூதர் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பால் ரபேல் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எந்தவிதத் தாமதமும் ஏற்படாது - பிரான்ஸ் நாட்டு தூதர் #FranceAmbassador | #Rafale | #India | #COVID19 | #EmmanuelLenain
— Polimer News (@polimernews) December 9, 2020
https://t.co/2jc4Q64HN3
Comments