அசாம் மாநில எல்லையில் ரூ.165 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

0 1092

அசாம் மாநில எல்லையில் ரைபிள் படை பிரிவினர் நடத்திய சோதனையில், 165 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மோரே நகரில் உள்ள 2 இடங்களில், அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த போதை பொருட்களும், வெளிநாட்டு கைத்துப்பாக்கி உள்ளிட்ட இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

இதுதொடர்பாக, 2 மியான்மர் நாட்டு கடத்தல்காரர்கள் உள்பட, 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments